FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரதி- பாரதிதாசன் இருவரும் இரு கண்களைப் போன்றவர்கள்

தஞ்சாவூர், ஏப். 29:  பாரதி- பாரதிதாசன் இருவரும் இரு கண்களைப் போன்றவர்கள் என்றார் சாகித்ய அகாதெமி செயற்குழு உறுப்பினர் சிற்பி பாலசுப்பிரமணியன்.   தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, பாவேந்தர் பார

27 டிசம்பர் 2023, 9:12 pm
பகிர்:

தஞ்சாவூர், ஏப். 29:  பாரதி- பாரதிதாசன் இருவரும் இரு கண்களைப் போன்றவர்கள் என்றார் சாகித்ய அகாதெமி செயற்குழு உறுப்பினர் சிற்பி பாலசுப்பிரமணியன்.

  தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, பாவேந்தர் பாரதிதாசன் அரசு அறக்கட்டளை சார்பில், வியாழக்கிழமை நடைபெற்ற பாரதிதாசனுக்குள் பாரதி என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:

  பாரதிதாசன் என்ற பெயரை உச்சரிப்பதில் சிலருக்கு விருப்பமில்லை எனக் கூறுவதில்  நியாயமில்லை. இந்தக் கருத்தை உடைத்தெரிய வேண்டும். பாரதி- பாரதிதாசன் இருவரும் இரு கண்கள் போன்றவர்கள். பாரதியாரை முழுமையாக உணர்ந்தவர் பாரதிதாசன்.

Advertisement

Advertisement

   பாரதிக்கு இலக்கணம் தெரியாது என்ற கூறுகிறவர்கள் அவரை பற்றி முழுமையாக அறியாதவர்கள். பாரதிக்கு இலக்கணம் தெரியும் என்பதை பாரதிதாசன் நிலைநாட்டினார். பாரதி குறித்து இவர் பேசிப் பாடியது போல, வேறு யாரும் இருந்திருக்க முடியாது. சீர்திருத்தம் என்ற சொல் தோன்றும் முன்பே பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து காட்டியவர் பாரதி.

  பாரதிசாதன் குறித்து பாரதியார் தராசு இதழ் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். அதில் கவிதை, கட்டுரைகளை நெசவு நூல் போல் நெய்ய வேண்டும் என்று பாரதிதாசனுக்கு சொல்லிய செய்தியை அறிய முடிகிறது. இருவருக்கும் உறுதியான உறவு இருந்திருப்பதை பாரதிதாசனின் கவிதை, கட்டுரைகள் மூலம் தெரிய வருகிறது.

  காலம் ஒரு சிந்தனையாளரை தேடிக் கொண்டிருந்த போது பாரதி பிறந்தார் என்று பெருமைபட கூறிய பாரதிதாசன், பாரதியும், பெரியாரும் இரு துருவங்கள் என்றும் கூறினார்.

  பாரதிதாசனுக்குள் பாரதி என்பது இருவரின் மொழி, இயற்கை குறித்த பார்வையை கூறுவதுதான். இதில் பாரதி அத்வைதத் தத்துவத்தையும், பாரதிதாசன் அழகுத் தத்துவத்தையும் கூறியுள்ளனர் என்றார் பாலசுப்பிரமணியன்.

  கருத்தரங்கில், ‘பாரதிதாசனுக்குள் பாரதி’ என்ற நூலை பேராசிரியர் தட்சிணாமூர்த்தி வெளியிட, பதிவாளர் சா.பி. சரவணன் பெற்றுக்கொண்டார்.

  மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் ச. ராதாகிருஷ்ணன், வளர் தமிழ்ப் புலத் தலைவர் அ. சித்திரபுத்தன், பேராசிரியர்கள் ரா.சு. முருகன், சு.ம. பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments