FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

4 ஜூலை 2026, 11:58 pm IST
ரயில்.
பகிர்:

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 5, 6 ஆம் தேதிகளில் ஆடுதுறை - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - ஆடுதுறை இடையே மட்டும் இயங்கும்.

இதேபோல மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 5, 6 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - ஆடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஆடுதுறை - செங்கோட்டை இடையே மட்டும் இயங்கும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments