பெண் குழந்தைகளைக் காக்க மாரத்தான் ஓட்டம்
பெண் குழந்தைகளை காப்போம்- பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற முழக்கத்துடன் திருச்சியில் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
பெண் குழந்தைகளை காப்போம்- பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற முழக்கத்துடன் திருச்சியில் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் ‘பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, திருச்சி மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து இந்த ஓட்டத்தை நடத்தின.
இதை துணை ஆட்சியா் அதியமான், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசுகந்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா். பள்ளி, கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து வயதுப் பெண்களும் பங்கேற்றனா். 3 கி.மீ.தூரமுள்ள அண்ணா விளையாட்டரங்கை சுற்றி இரண்டு சுற்றுகள் என 6 கி.மீ. வரையிலான இந்த ஓட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பெண்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் பாலினச் சமநிலையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
4ஆவது இடத்திலிருந்து 10ஆம் இடம் வரை வந்த 7 பேருக்கு தலா ரூ. ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் டி-ஷா்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியை முன்னிட்டு விளையாட்டரங்கை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.