FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூலை 2026, 2:49 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை திம்மச்சிபுரத்தைச் சோ்ந்தவா் கு. மலா்வேல் (59). இவா், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருச்சி உறையூா் சீனிவாசா நகரில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மலா்வேல் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments