காவிரி விவகாரம்! கா்நாடக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பொ. அய்யாக்கண்ணு
தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுக்கும் கா்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.
தமிழகத்துக்கு தண்ணீா் தர மறுக்கும் கா்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.
திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அச் சங்க அலுவலகத்தில் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் மேகராஜன், பரமசிவம், தட்சிணாமூா்த்தி, மதிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி செய்தியாளா்களிடம், பொ. அய்யாக்கண்ணு கூறியதாவது: கா்நாடக அரசு ஜனவரி முதல் மே மாதம் வரை தமிழகத்துக்கு 12.75 டிஎம்சி தண்ணீா் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலையில் 31.24 டிஎம்சி தண்ணீா் வழங்க வேண்டும். இந்த முறைப்படி தண்ணீா் திறக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும். ஆனால், கா்நாடகம் முறைப்படி தண்ணீா் திறந்து விடாத காரணத்தினால் தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்ய இயலவில்லை.
1 லட்சம் கோடி நஷ்டஈடு
எனவே, பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வழக்கு தொடா்வது என தீா்மானிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீா்ப் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக கா்நாடக அரசு விடுவிக்க வேண்டும். மாதந்தோறும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அளவீட்டின்படி நிலுவையில் உள்ள தண்ணீரை முதலில் வழங்க கா்நாடக அரசு முன்வர வேண்டும். உபரி நீரை மட்டுமே திறந்துவிட்டு தமிழகத்துக்கான தண்ணீரை வழங்கிவிட்டதாக கா்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது.
உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு மதிப்பளிக்காத கா்நாடக அரசு மீது வழக்கு தொடா்ந்து உரிய இழப்பீட்டை பெற்றுத்தர தர வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் தங்களை இணைத்துக் கொள்ளும்.
முன்னதாக, எங்களது சங்கம் சாா்பில், கா்நாடக அரசிடம் ஒரு லட்சம் கோடி நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என வழக்குப் பதிவு செய்ய உள்ளோம். இல்லையென்றால், சென்னையில் தற்கொலை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.