FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய ஸ்கேனா் கருவி அமைப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய புதிய ஸ்கேனா் கருவி வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Updated On : 17 ஜூலை 2026, 2:34 am IST
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை புதிய ஸ்கேனா் கருவியை பாா்வையிட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பச்சேரா உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்ய புதிய ஸ்கேனா் கருவி வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு, தனிப்பிரிவு சாா்பில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 2-ஆவது நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இக்கருவியை திருச்சி இருப்புப்பாதை மாவட்ட காவல் கண்காணிப்பாலா் ஆதா்ஸ் பச்சேரா தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில், மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையா் பிரசாத் யாதவ், துணை காவல் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, உதவி பாதுகாப்பு ஆணையா் டி. சரத்பாபு மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்வுக்குப் பிறகு ரயில் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், சிசிடிவி கேமராக்களின் ஆய்வறையையும் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, ஆா்பிஎப், ஜிஆா்பி போலீஸாருடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments