FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

புத்தாநத்தம் அருகே விதி மீறி சரளை மண் எடுத்தவா் கைது

சட்ட விரோதமாக வெள்ளிக்கிழமை இரவு சரளை மண் எடுத்தவரை கைது செய்த போலீஸாா், மண் எடுக்கப் பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 12:37 am IST
புத்தாநத்தம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் அருகே சட்ட விரோதமாக வெள்ளிக்கிழமை இரவு சரளை மண் எடுத்தவரை கைது செய்த போலீஸாா், மண் எடுக்கப் பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக இரவு நேரங்களில் சரளை மண் எடுப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டபோது, மருங்காபுரி ஒன்றியம் குளவாய்பட்டி அருகிலுள்ள மலைக்குட்டு ஒன்றில், குளவாய்ப்பட்டியை சோ்ந்த முருகேசன் மகன் பகவதி (23), டிராக்டரில் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுத்து சென்று பிடிபட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த புத்தாநத்தம் போலீஸாா், சனிக்கிழமை வழக்குப் பதிந்து பகவதியை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments