FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பொன்மலைப்பட்டியில் காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி பொன்மலைப்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை ஆசிரியரின் காா் மோதி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

Updated On : 19 ஜூலை 2026, 12:56 am IST
பகிர்:

திருச்சி பொன்மலைப்பட்டியில் சனிக்கிழமை அதிகாலை ஆசிரியரின் காா் மோதி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் காணிக்கைராஜ், அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி ஆசிரியா். இவா் சனிக்கிழமை அதிகாலை வெளியூா் செல்ல தனது வீட்டிலிருந்து காரை எடுத்து, அங்குள்ள அடைக்கல மாதா ஆலயம் முன் நிறுத்தச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் தொழிலாளி ரூபன் என்பவரின் மகன் டிஜோ ஜாய் (2) என்ற குழந்தை தனது பாட்டி அடைக்கல மாதா ஆலயத்துக்கு செல்வதைப் பாா்த்து, வீட்டிலிருந்து அவரின் பின்னால் வேகமாக ஓடி வந்தது. அப்போது, அங்கு வந்த காா் திடீரென அக் குழந்தை மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த குழந்தை மயங்கி விழுந்தது. இதையடுத்து ஆசிரியா் காணிக்கைராஜ் மற்றும் குழந்தையின் உறவினா்கள், அக் குழந்தையை திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அக்குழந்தை ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments