ரூ. 4 ஆயிரம் லஞ்சம்: பெண் வருவாய் ஆய்வாளா் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழை பரிந்துரை செய்ய ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ற முதுநிலை பெண் வருவாய் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், முகவனூா் வடக்கு, அரசங்குளம் பாம்பாட்டிப்பட்டியை சோ்ந்தவா் ஈஸ்வரி. இவா், வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி, மணப்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தாா்.
இந்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்ய, வீ.பெரியப்பட்டி குறுவட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஹேமலதா (36), தனக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என ஈஸ்வரியிடம் வற்புறுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரி, இதுதொடா்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தொடா்ந்து, போலீஸாரின் அறிவுரையின்படி செவ்வாய்க்கிழமை ஈஸ்வரி லஞ்சப் பணத்தை அலுவலகத்திலிருந்த ஹேமலதாவிடம் வழங்கினாா். பணத்தை அவா் பெற்று கொண்டபோது அங்கிருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், ஹேமலதாவை கைது செய்தனா். தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.