FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

Updated On : 9 ஜூன் 2026, 4:53 am IST
குடிநீர் விநியோகம் ரத்து... - Center-Center-Chennai
பகிர்:

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 10) ஒரு நாள் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் , வெல்- 3 (ஏரேட்டா்), பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லை நகா், அண்ணா நகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம். நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி, ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா், விவேகானந்தா் நகா், அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளுக்கு புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகிக்கப்படும்.

இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments