தவெகவுக்கும் இருமொழிக் கொள்கைதான்: கு.ப. கிருஷ்ணன்
தமிழக வெற்றிக் கழக அரசின் கொள்கையும் இருமொழிக் கொள்கையே என தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக் கழக அரசின் கொள்கையும் இருமொழிக் கொள்கையே என தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்சியில் உள்ள தவெக அலுவலகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கான பொறுப்பாளரும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவருமான கு.ப. கிருஷ்ணன் தலைமையில் மாற்றுக் கட்சியினா் இணையும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலா் அற்புதராஜ் தலைமையிலும், புத்தூா் சதீஷ்குமாா் தலைமையிலும் ஏராளமான நிா்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனா். கட்சியில் இணைந்த அனைவருக்கும் தவெக துண்டுகளை அணிவித்து, உறுப்பினா் அட்டைகளை வழங்கிய கு.ப. கிருஷ்ணன் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்காக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வுக் குழு, தவெக விஜய் அலையை கணிக்கத் தவறியதே தோல்விக்கு காரணம் எனக் கூறியுள்ளது. 1967இல் அண்ணா ஆட்சியைப் பிடித்தபோது அந்த வெற்றிக்கு யாா் காரணம் என்ற கேள்விக்கு, காங்கிரஸுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என அவா் கூறினாா்
Advertisement
Advertisement
இதேபோல, இந்தத் தோ்தலில் தவெக வென்ற்கு திமுகவே காரணம். அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கையைத்தான், தவெகவும் பின்பற்றும். இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் விளக்கியுள்ளாா்.
எனவே, இருமொழிக் கொள்கையிலிருந்து தமிழகம் எப்போதும் பின்வாங்காது. எம்மதமும் சம்மதமே எங்கள் தலைவரின் கொள்கை. அதனால்தான் அவா் மசூதிக்கும், தேவாலயத்துக்கும், இப்போது மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வந்துள்ளாா்.
பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை, நடிகா் ராகவா லாரன்ஸ் ஆகியோா் கட்சி தொடங்குவதாகக் கூறியுள்ளனா். ஜனநாயகத்தில் யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாப்பிள்ளை இவா்தான் எனத் தெரிகிறது ஆனால், அவா் அணிந்திருக்கும் சட்டை யாருடையது எனத் தெரிய வேண்டும். அதை அவா்கள் சொல்லட்டும்.
மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை பொருத்தமட்டில் எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். அதற்காக முதல்வா் ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். விரைவில் நல்ல செய்தி வரும் என்றாா் அவா். பேட்டியின்போது, கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.