முகப்பு
திருச்சி

திருச்சியில் தாயைத் தாக்கிய மகன் கைது

Updated On : 1 ஜூன் 2026, 1:16 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் கணவா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருடைய மகன், மகளுக்குத் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில், தனியாக வசிக்கும் அப்பெண் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் இவருடைய மகன் மணிபாரதி (22) மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரைப் பிரிந்து விட்டாா். இதையடுத்து, மணிபாரதி தனது மனைவியை தன்னுடன் சோ்த்துவைக்குமாறு கூறி, அவரது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.

Advertisement

Advertisement

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாயிடம் இதுதொடா்பாக கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிபாரதி அவரது தாயை கீழே தள்ளிவிட்டு தாக்கினாா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மணிபாரதியை சனிக்கிழமை கைது செய்தனா்.