அறிவியல் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
அரியலூர் கல்வி மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், "மண் வளம் காப்போம், நலமோடு வாழ்வோம்' என்ற தலைப்பில் அறிவியல் நாடகப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 18 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் மான்ட்போர்ட் பள்ளி 3 ஆம் இடத்தைப் பிடித்து, 2-ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. பின்னர், வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற 2-ஆம் கட்டப் போட்டியில் மான்ட்போர்ட் பள்ளி 2-ஆம் இடம் பெற்றது. இப்போட்டியில் இயற்கை உரம் தயாரிப்பு, பஞ்சகவ்வியம் தயாரிப்பு, மண் பரிசோதனை செய்யும் முறை உள்ளிட்டவைகளை தங்கள் நாடகத்தின் மூலம் மாணவிகள் விளக்கிக் கூறினர். இப்போட்டியில் வென்ற மாணவிகளை பள்ளி முதல்வர் டோம்னிக் சாவியோ பாராட்டினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.