செந்துறை: திமுக மகளிரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் மின் வெட்டை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் செந்துறையில் மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் மின் வெட்டை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் செந்துறையில் மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத அரியலூர் பகுதியில் 6 மணி நேரமும், திருமானூர் பகுதிகளில் 8 மணி நேரமும், ஜயங்கொண்டம் பகுதியில் 5 மணி நேரமும் செந்துறையில் 7 மணி நேரமும்அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. மகளிரணித் தலைவி மங்கையர்க்கரசி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ஞானமூர்த்தி, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராசு, ஒன்றிய பொருளாளர் சிவப்பிரகாசம் மற்றும் திரளான திமுக-வினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.