அரியலூர் அருகேஇரு குடும்பத்தினரிடையே தகராறு: இருவர் கைது
அரியலூர் அருகே இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
அரியலூர் அருகே இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள காசான்கோட்டை கொட்டாய் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (38). இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரி அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை கலியமூர்த்தி வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதனால் மகேந்திரன், வேம்பு என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரி தனது தந்தை கலியமூர்த்தி, தாய் புகழ், சகோதரர் ராமன் ஆகியோருடன் மகேந்திரன் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் காயமடைந்த மகேஸ்வரி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீஸார் மகேந்திரனின் தாய் மலர்க்கொடி, கலியமூர்த்தி இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.