அரியலூர் தனியார் பள்ளியில்காவலாளியை கட்டிப் போட்டுகேமரா, ரொக்கம் திருட்டு
அரியலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் பள்ளியின் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம், கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரியலூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் பள்ளியின் காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக பூட்டை உடைத்து ரூ. 8 ஆயிரம் ரொக்கம், கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
அரியலூர் ராஜாஜி நகரில் நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் காவலராக இருப்பவர் பிலோமின்ராஜ் (41). வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவர், காவல் பணியில் இருந்த பிலோமின்ராஜை கட்டிப் போட்டுவிட்டு, அலுவலக அறையின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.