சைக்கிள் மீது பைக் மோதி தந்தை,மகன் பலத்த காயம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனர்.
உடையார்பாளையம் கருடகம்பத் தெருவைச் சேர்ந்த சின்னதம்பி மகன் வெங்கடேசன் (43). ஞாயிற்றுக்கிழமை இவர் தனது மகன் வினோத்குமாரை (12) சைக்கிளில் அழைத்துக்கொண்டு உடையார்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் பழனிவேல்(46) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.