காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
ஜயங்கொண்டம் அருகே தொட்டிகுளம் கிராமத்தில் வீரியரக காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் அருகே தொட்டிகுளம் கிராமத்தில் வீரியரக காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் வட்டார வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கு உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜா ஜோஸ்லின், வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், வீரிய ரக காய்கறிகள் சாகுபடி, விதை நேர்த்தி,, குழித்தட்டு நாற்றங்கால், சாகுபடி நிலம் தயார் செய்தல், பயிர் இடைவெளி, நீர் நிர்வாகம், உர நிர்வாகம், கட்டுப்பாடு வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல், பூச்சி நோய் நிர்வாகம், அறுவடை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்தல் தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி அட்மா திட்ட செயல்பாடுகளை விளக்கினார். இதில், தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பண்ணை மகளிர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உழவர் நண்பர் மாணிக்கவாசகம் செய்திருந்தார். முன்னதாக, உதவி தோட்டக்கலை அலுவலர் பெரியசாமி வரவேற்றார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சங்கீதபிரியா நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.