தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு, உதவி பெறும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசு, உதவி பெறும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) கே.எஸ்.கற்பகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தொழில்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற எட்டாம், பத்தாம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலைய விவரங்கள், தொழில் பிரிவுகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன. இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து www.skilltraining என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகின்றனர் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் உள்ள தொழில் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான தேதி இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழில்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் தொழில் பிரிவு, தொழில் பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்டக் கலந்தாய்வில் தேர்வு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.