ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் திருட்டு
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 4 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 4 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மணலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(58). இவர், அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். இவர், தற்போது திருமானூர் வேலன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 22 ஆம் தேதி தனது குடும்பத்துடன் மணலி சென்றிருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை ராஜேந்திரன் வீட்டின் கதவு கிடந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ராஜேந்திரன், வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில், அங்கிருந்த 2 பீரோக்களை மர்மநபர்கள் உடைத்திருப்பதும், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.