வி.கைகாட்டியில் தலைக்கவச விழிப்புணர்வு
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ரவுண்டானா பகுதியில் காவல் துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ரவுண்டானா பகுதியில் காவல் துறை சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு புதன்கிழமை நடைபெற்றது.
கயர்லாபாத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீஸார், இருசக்கர மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் போலீஸார், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களை மறித்து, பிரேக் , பின் பக்க விளக்கு மற்றும் இன்டிகேட்டர் மின் விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்து, மெக்கானிக் மூலம் இலவசமாக சரி செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து , விபத்தில்லாமல் பயணத்தை மேற்கொள்வது குறித்தும், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்து வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.