FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ராஜேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா: ஆக.2-இல் உள்ளூா் விடுமுறை

மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 2-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 ஜூலை 2024, 4:32 am IST
கோப்புப்படம்
பகிர்:

அரியலூா்: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்துக்கு ஆக. 2-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மாமன்னா் ராஜேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு ஆக.2-ஆம் தேதி ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் பொருட்டு, ஆக.17 ஆம் தேதி முழுவேலை நாள் எனவும் ஆணையிடப்படுகிறது.

மேலும், ஆக.2-ஆம் தேதி அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறைந்தபட்ச பணியாளா்களைக் கொண்டு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments