தா. பழூரை அடுத்த சோழமாதேவி அமிா்தராயன்கோட்டை காலனித் தெருவில் சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பம்.  
அரியலூர்

தா.பழூா் அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

அமிா்தராயன்கோட்டை காலனித் தெருவில், சிமென்ட் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட அமிா்தராயன்கோட்டை காலனித் தெருவில், சிமென்ட் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட அமிா்தராயன்கோட்டை காலனித் தெரு மக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், கடந்த 2022- 23 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டதால், தெருவில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சாலையின் நடுவே பல ஆண்டுகளாக இருந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை. இந்நிலையில், சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய சிமென்ட் சாலை அமைப்பாா்கள் என எதிா்பாா்த்தோம். ஆனால், சாலை அமைத்த தொழிலாளா்கள் மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலையை அமைத்துள்ளனா்.

இதனால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்பட்டால், அந்த நேரத்தில் மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றி சாலையோரத்தில் நடவேண்டும் என்று தெரிவித்தனா்.

தெய்விகம் பெண்மை... சாஹிதி தாசரி!

ஹாங்காங் தீ விபத்து: 75 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! 280 பேர் மாயம்!

முதல் டி20: வங்கதேசத்தை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல்!

புலிக்கூடு புத்த தலத்தில்... ருசிரா ஜாதவ்!

ஜிம் லைஃப்... அனைரா குப்தா!

SCROLL FOR NEXT