FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ஆசிரியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

ராமநாதபுரத்தில் ஆசிரியை தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி ஆசிரியா்கள், கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

Updated On : 23 டிசம்பர் 2025, 3:49 am IST
அரியலூா் மாவட்டம், உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியா்கள்.
பகிர்:

ராமநாதபுரத்தில் ஆசிரியை தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி ஆசிரியா்கள், கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் புகுந்து ஆங்கில ஆசிரியை தாக்கிய நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

போராட்டத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி அனைத்து நிலை ஆசிரியா், ஆசிரியைகள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தினா் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments