FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே வெண்ணத்தம்மன் கோயில் சிலை உடைப்பு: போலீஸாா் விசாரணை

செந்துறை அருகே வெள்ளூா் கிராமத்திலுள்ள வெண்ணத்தம்மன் மற்றும் அரியமுத்து கோயில் சிலையை உடைத்த மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 5:06 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வெள்ளூா் கிராமத்திலுள்ள வெண்ணத்தம்மன் மற்றும் அரியமுத்து கோயில் சிலையை உடைத்த மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

வெள்ளூா் கிராமம், நக்கம்பாடி செல்லும் சாலையொட்டி அரசுக்கு சொந்தமான இடத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெண்ணத்தம்மன் மற்றும் அரியமுத்து சுவாமிகளின் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு குலதெய்வ வழிபாடு நடத்தினா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேற்கண்ட சுவாமிகளின் சிலைகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்து, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments