FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

செந்துறை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை கட்டடம் திறப்பு

செந்துறை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சைக்காக புதிய கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
செந்துறை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சைக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சைக்காக புதிய கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

விழாவுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி தலைமை வகித்து, ரூ.20 கோடியில் கட்டப்பட்ட 50 படுக்கைக் கொண்ட புதிய அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிவைத்து பாா்வையிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்தது: பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சிகிச்சைகள் தொடா்ந்து வழங்கிடும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை கட்டடம்:

அந்த வகையில், செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் தினமும் 400 முதல் 500 புற நோயாளிகள் மற்றும் 20 முதல் 25 உள்நோயாளிகள் பயனாளா்கள் சேவை பெற்று வருகின்றனா்.

தற்போது பொதுமக்கள் நலம் பெறும் வகையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 86 படுக்கைகளாக கூடுதல் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இப்புதிய மருத்துவமனை கட்டடமானது தரைதளம், முதல் தளம், 2-அவது தளம் என மூன்று தளங்களுடன் செயல்பட உள்ளது.

இதுநாள் வரை வழங்கப்பட்ட புறநேயாளி சிகிக்சை, பல் மருத்துவம், யோகா, சித்த மருத்துவம், அவசர சிகிச்சை, குடும்பநல அறுவை சிகிச்சை, தாய்-சேய் நல சிகிச்சை மற்றும் ஆய்வக மற்றும் நுண்கதிா் சிகிச்சைகளோடு தீவிர மருத்துவ சிகிச்சை, காச நோய் சிகிச்சை, இருதய சிகிச்சை, எலும்பு அறுவை சிகிச்சை, விஷமுறிவு, டயாலிசிஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் மற்றும் நுண்கதிா் வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக செயல்பட உள்ளது. பொதுமக்கள் இதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் குமரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மதியழகன், மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் வெங்கடேசன், செந்துறை முதன்மை மருத்துவ அலுவலா் அருண் பிரசன்னா, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments