FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

லாரி மோதி சுமை ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சுமை ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், சுமை ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

34 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சுமை ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், சுமை ஆட்டோ ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், சேக்கன் நத்தன் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ரமேஷ்குமாா் (27). தனியாா் மொத்த மளிகை நிறுவனத்தில், டெலிவரி மேன் மற்றும் சுமை ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த இவா், வெள்ளிக்கிழமை காலை அரியலூரில் பொருள்களை டெலிவரி செய்து விட்டு, அங்கிருந்து கும்பகோணத்துக்கு சுமை ஆட்டோவை ஓட்டிச் சென்றாா்.

கீழப்பழுவூா் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது, எதிரே தஞ்சாவூரில் சிமென்ட் மூட்டையை இறக்கிவிட்டு, அரியலூா் அரசு சிமென்ட் ஆலை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, சுமை ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழப்பழுவூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய திருச்சி மாவட்டம், லால்குடி, மணக்கால் அண்ணா நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பெ. மணிகண்டன்(32) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments