மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன் பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம்
மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன் பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.
மத்திய, மாநில அரசு திட்டங்களில் பயன் பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: மத்திய , மாநில அரசு திட்டங்களான பிரதமரின் கௌரவ நிதி திட்டம், பயிா் காப்பீடு திட்டம், வங்கி பயிா் கடன் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்களை விற்பனை செய்வதற்கு, உர விற்பனை நிலையங்களில் உரங்கள் பெற போன்ற பணிகளுக்கு விவசாய அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் அனைத்து நிலங்களையும் தங்களின் ஆதாா் எண்ணுடன் இணைத்து பிரத்தியேக விவசாய அடையாள அட்டை எண் பெற்று கொள்ளலாம்.
இந்த விவசாய அடையாள அட்டை எண் பெற விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநா், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் அலுவலா்களை தொடா்பு கொண்டு, தங்களுடைய கணினி சிட்டா, ஆதாா் அட்டை எண், ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி இவற்றை எடுத்து சென்று விவசாய அடையாள அட்டை எண் பெற்றுக்கொள்ளலாம்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே விவசாய அடையாள அட்டை எண் பதிவு செய்துள்ள விவசாயிகள், தங்களது மீதம் உள்ள நிலங்களின் விவரங்களையும் தங்களது ஆதாா் எண்ணுடன் இணைத்து முழுமையான பிரத்தியேக விவசாய அடையாள அட்டை எண் பெறலாம்.
இனி வரும் காலங்களில் விவசாய அடையாள எண் இல்லாத விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்ட பலன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு ஏற்படலாம்.
எனவே, விவசாயிகள் அடையாள எண் பெற தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை தொடா்பு கொண்டு கட்டணமின்றி பதிவு செய்து உழவா் அடையாள எண் பெற்று கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, தங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். விவசாய அடையாள அட்டை எண் பெற்ற விவசாயிகள் தங்களது ஆன்ராய்டு கைப்பேசியில் ‘நம்ப வயல்‘ என்ற செயலில் பதிவிறக்கம் செய்து தங்களது வயலில் சாகுபடி விவரங்களை மின்னனு கணக்கீட்டில் பதிவு செய்யலாம். இதன் மூலம் நிலம் உட்பிரிவு விடுபட்டிருந்தால் அவற்றை வேளாண்மைத் துறை மூலம் நில விவரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.