அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ஐசிடிஎஸ் திட்டத்தை தனியாா்மயம் என்ற பெயரில் சீா்குலைக்க வேண்டாம். அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்கி, அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணி ஓய்வின்போது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்கிட வேண்டும்.
அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜாமணி தலைமை வகித்து பேசினாா். பொருளாளா் உமா, மாநில செயற்குழு உறுப்பினா் பரமேஸ்வரி, சிஐடியு நிா்வாகி துரைசாமி மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.