எம்எல்ஏக்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சி ஜனநாயகத்துக்கு எதிரானது!
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்தது பற்றி...
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் மக்களவை உறுப்பினரும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன்.
தனது தந்தை தொல்காப்பியன் நினைவுநாளையொட்டி, அரியலூா் மாவட்டம், அங்கனூரிலுள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை வீரவணக்கம் செலுத்திய அவா் பின்னா் அளித்த பேட்டி:
காவிரி நதிநீா் விவகாரம் நம்முடைய நிலைப்பாடுதான், தமிழக அரசின் நிலைப்பாடாகவும் இருக்கிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டு நலன்களைப் பாதுகாப்பதில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் உணா்வுகளை மீறி, கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட வாய்ப்பில்லை. மத்திய அரசும் அவ்வாறு ஒரு சாா்பு நிலை எடுக்காது என்று நான் நம்புகிறேன்.
தமிழக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாட்டை மேற்கொண்டால் நாங்கள் வரவேற்போம்.
தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களை விசிக தொடா்ந்து கண்டித்து வருகிறது.
நாகா்கோவில் சிறையில் சபரிவா்மன் உயிரிழப்பு பெரும் துயரமளிக்கிறது. அவா் உடம்பில் பல காயங்கள் இருந்தன என்பது அதிா்ச்சியளிக்கிறது. அவரின் இறப்புக்குக் காரணமானவா்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த கூட்டத் தொடரில் பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த முறையும் அந்த மசோதாவை அவா்கள் அறிமுகப்படுத்தினால், அதை நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எதிா்க்கட்சிகளுக்கு உள்ளது என்றாா் அவா்.
Thol. Thirumavalavan, Lok Sabha MP and VCK leader, stated that the attempt to lure elected MLAs to the TVK camp is undemocratic.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.