FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ஊழல், லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு, வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ‘லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா்‘ என்ற தலைப்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 18 ஜூலை 2026, 12:48 am IST
அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு, வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கத்தில் தங்களது கைரேகைகளை பதிவு செய்த கல்லூரி மாணவ, மாணவிகள்.
பகிர்:

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு, வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ‘லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா்‘ என்ற தலைப்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

அரியலூா் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவா் டி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவா் கு. மாரியம்மாள், அங்கு வைக்கப்பட்டிருந்த கருப்பு நிறத்திலான பதாகையில் தனது கைரேகைகளை பதிவு செய்து கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் தங்களை கைரேகைகளை பதிவு செய்தனா்.

நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம். சந்திரசேகா், மாவட்ட மகளிரணி தலைவா் பூங்கொடி, மாவட்ட துணைத் தலைவா் கலைச்செல்வன், முன்னாள் ஊராட்சி தலைவா் மணக்கால் பழனிமுத்து, வட்டார செயலா் செல்வ விநாயகம், மாவட்ட செயலா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments