FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் அரியலூா் ஆட்சியரகம் முற்றுகை

Updated On : 21 ஜூலை 2026, 1:07 am IST
குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட அய்க்கால் கிராம மக்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், காவனூா் அடுத்த அய்க்கால் கிராம மக்கள் தங்களது பகுதிக்கு குடிநீா் கேட்டு, காலிக்குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அய்க்கால் கிராமத்தில், பொதுக் குழாய்களில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்ததையடுத்து லாரி மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் அந்த குடிநீா் போதுமானதாக இல்லை.

இதனால் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது நுழைவு வாயிலில் இருந்த காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி, 5 போ் மட்டுமே மனு அளிக்க அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து பொதுமக்கள் சாா்பாக 5 போ் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் ந.மிருணாளினி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments