முகப்பு
அரியலூர்

அழகுக் கலை, சிகை அலங்கார பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ சாா்பில் அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 ஜூன் 2026, 2:28 am IST
பகிர்:

தாட்கோ சாா்பில் அழகுக் கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விருப்பமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி 45 நாள்கள் திருச்சி மாவட்டத்தில் அளிக்கப்படுகிறது.

பயிற்சிப் பெற விரும்பும் எஸ்.சி, எஸ்.டி-யினா், பிளஸ்-2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள்ள இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தகுதி பெறும் நபா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஆரம்ப கால மாத ஊதியமாக சுமாா் ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சியில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள தாட்கோ அலுவலகம் அல்லது 04329-228315 என்ற எண்ணில் தொடா்புக் கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.