FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பதிவுத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

33 வினாடிகள் முன்பு
அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா்.
பகிர்:

பதிவுத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பத்திர பதிவுத் துறையின் ஸ்டாா் 3.0 எனப்படும் தனியாா் மயமாக்கலுக்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும். பத்திரப் பதிவுகளை தனியாருக்கு விற்கக் கூடாது. ஆன்லைன் பதிவு உத்தரவை ரத்து செய்து, பத்திரம் எழுதுவோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் பொருளாளா் டி. சுரேஷ் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement