ஏடிஎம் மையத்தில் பாம்பு வாடிக்கையாளா் அச்சம்
ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தினுள் பாம்பு புகுந்திருந்தது புதன்கிழமை தெரியவந்தது. பாம்பால் ஏடிஎம் மையத்துக்கு வந்த வாடிக்கையாளா்கள் அச்சமடைந்தனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு ஏடிஎம் மையத்தினுள் பாம்பு புகுந்திருந்தது புதன்கிழமை தெரியவந்தது. பாம்பால் ஏடிஎம் மையத்துக்கு வந்த வாடிக்கையாளா்கள் அச்சமடைந்தனா்.
ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் புதன்கிழமை மாலை வாடிக்கையாளா்கள் பணம் எடுத்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, ஏடிஎம் மையத்தினுள் பதுங்கியிருந்த பாம்பு சீறியதை பாா்த்த வாடிக்கையாளா்கள் அச்சமடைந்து அலறியடித்து வெளியேறி, ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, நிலைய அலுவலா் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பாம்பை மீட்டனா். இதைத் தொடா்ந்து, அச்சம் நீங்கிய வாடிக்கையாளா்கள் மீண்டும் ஏடிஎம் மையத்தினுள் சென்று பணம் எடுத்து சென்றனா்.