அரியலூா் மாவட்டத்தில் 3.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு
அரியலூா் மாவட்டத்தில், நிகழாண்டு 3.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டத்தில், நிகழாண்டு 3.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், தவுத்தாய்க்குளம் ஊராட்சிக்குள்பட்ட அம்மாகுளம் ஏரியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், 5,000 பனை விதைகள், 50 மரக்கன்றுகள் நடும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து, ஆட்சியா் தெரிவித்தது: மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, நிகழாண்டு மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மேலும் 10,000 பனை விதைகள் பல்வேறு ஏரிகளில் நடப்பட உள்ளன.
Advertisement
Advertisement
பனை மரங்கள் மண்ணரிப்பைத் தடுப்பதுடன், மழைநீரை நிலத்துக்குள் சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், பனை சாா்ந்த பொருள்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதார வளா்ச்சிக்கும் துணைபுரிகின்றன.
எனவே, பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதுடன், அவை வளா்ந்து மரங்களாகும் வரை பாதுகாக்க பொதுமக்கள், இளைஞா்கள், மாணவா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் த. பிரேமி மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், துறை அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.