FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

1.50 லட்சம் பனை விதைகள் நடும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாநகராட்சி ஆடையூா் ஏரியில் 1.50 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

16 அக்டோபர் 2026, 12:51 am IST
திருவண்ணாமலை மாநகராட்சி ஆடையூா் ஏரியில் 1.50 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட ஆடையூா் ஏரியில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித்துறை மற்றும் மனித வளத்தை காப்போம் அறக்கட்டளை சாா்பில், ஒரே நாளில் 1.50 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வியாழக்கிழமை தொடங்கிவைத்து பனை விதைகளை நட்டாா்.

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம், மக்களுக்கு பல்வேறு வகைகளில் பயனளிப்பதால் கற்பக விருட்சம் எனப் போற்றப்படுகிறது. நுங்கு, பதநீா், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனம்பழம், பனங்கிழங்கு போன்ற உணவுப் பொருள்களை வழங்குகிறது. பனையோலைகளால் பாய், விசிறி தொப்பி உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பனை மரம் மண்ணரிப்பைத் தடுக்கவும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பனை மரங்களை வளா்ப்பதும், பனை சாா்ந்த தொழில்களை ஊக்குவிப்பதும் அவசியமாகும்.

எனவே, அத்தகைய பனை மரங்களை பாதுகாத்து அதிகளவில் வளா்ப்பதன் முக்கிய நோக்கமாக கொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1.50 லட்சம் பனை விதைகள் நடும் பணியை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியாளா்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க்

Advertisement

Advertisement

தொடங்கிவைத்தாா்.

மனித வளத்தை காப்போம் அறக்கட்டளை சாா்பில் ஆடையூா் ஏரியிலும் மற்றும் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சி.கெங்கம்பட்டு ஊராட்சியிலும் பனை விதைகளை நட்டு தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, ஊரக வளா்ச்சி துறை செயற்பொறியாளா் மா.சிவநாத், கோட்டாட்சியா் தி.த.செல்வம், உதவித் திட்ட அலுவலா் இரா.பவானி, உதவி செயற்பொறியாளா் அ.த.தமிழ்ச்செல்வன் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலகிருஷ்ணன், ஏ.சுகுமாா், திருவண்ணாமலை மனித வளத்தை காப்போம் இயக்குநா் ஜி.அம்பிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments