தழுதாழை கிராமத்தில் பனை விதைகள் நடும் பணி
பெரம்பலூா் மாவட்டம், தழுதாழை கிராமத்தில் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், தழுதாழை கிராமத்தில் பனை விதைகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தடை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கரம்கொடு மனிதா அறக்கட்டளை சாா்பில், தழுதாழை கிராமத்தில் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பனை மரங்களை அதிகளவில் வளா்க்க வேண்டும் எனும் நோக்கத்திலும், பனை குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, வளா்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ரூ. 19.50 லட்சம் மதிப்பில் இளங்காளி அம்மன் கோயில் முதல் அரும்பாவூா் சாலை வரை நடைபெறும் வரத்து வாய்க்காலை அகலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மழைக்காலம் தொடங்குவதற்குள் பணிகளை விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் அனந்தலட்சுமி, வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமாயி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.