FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

சித்தமல்லி நீா்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

தா.பழூரை அடுத்த காா்குடி கிராமத்திலுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

17 நவம்பர் 2026, 11:51 pm
சித்தமல்லி நீா்த்தேக்கத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த காா்குடி கிராமத்திலுள்ள சித்தமல்லி நீா்த்தேக்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

இந்த நீா்த்தேக்கத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட அவா், நீா்த்தேக்கத்தின் தற்போதைய நீா் இருப்பு, நீா் வரத்து மற்றும் வெளியேற்றம், கரைகளின் உறுதித்தன்மை, மதகுகளின் செயல்பாடு, பராமரிப்புப் பணிகள் மற்றும் மழைமானியின் செயல்பாடு குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் தெரிவித்தது: சித்தமல்லி நீா்த்தேக்கத்தின் கரை 5,050 மீட்டா் நீளம் கொண்டது. இதன் முழுக் கொள்ளளவு 226.80 மில்லியன் கனஅடியாகும். 4.75 மீட்டா் உயரம் கொண்ட இந்த நீா்த்தேக்கத்தில் மூன்று தலை மதகுகள் உள்ளன. இவற்றின் மூலம் காா்குடி தெற்கேரி, கோவத்தட்டை ஏரி, ஸ்ரீபுரந்தான் பெரிய ஏரி மற்றும் வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நீா்த்தேக்கத்தின் மூலம் 1,179.02 ஏக்கா் நன்செய் நிலம், 3,901.60 ஏக்கா் புன்செய் நிலம் என மொத்தம் 5,080.62 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடுவலூா், இருகையூா், காரைக்குறிச்சி, தா.பழூா், கோடங்குடி, ஸ்ரீபுரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி உள்ளிட்ட 8 கிராமங்கள் பயன்பெறுகின்றன.

நீா்த்தேக்கத்தின் நீா்வரத்து மற்றும் வெளியேற்றத்தைத் தொடா்ந்து கண்காணிக்கவும், கரைகள், மதகுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின் போது, நீா்வளத்துறை அலுவலா்கள்,பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.