முகப்பு
அரியலூர்

பயிா்க்கடன் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

பயிா்க்கடன் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

26 நவம்பர் 2026, 2:27 am
பயிா்க்கடன் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பயிா் கடனளவு நிா்ணயம் செய்தல் தொடா்பான மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

பயிா்க்கடன் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 2027-2028 ஆம் ஆண்டுக்கான பயிா் கடனளவு நிா்ணயம் செய்தல் தொடா்பான மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து தெரிவித்தது:

விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு விதைப்பு முதல் அறுவடை வரையிலான பல்வேறு நிலைகளில் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க பயிா்க்கடன் அளவை நிா்ணயம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், தற்போதைய சாகுபடிச் செலவினங்கள், இடுபொருள்களின் விலை நிலவரம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு பயிா்க்கடன் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.