முகப்பு
அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் 3டி மாதிரி சிற்பம் திறப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் சோழா் கால சிற்பக் கலையின் நுணுக்கங்களைத் தொட்டுணா்ந்து அறிந்துகொள்ளும் வகையில், இந்திய தொல்லியல் துறை சாா்பில் உருவாக்கப்பட்ட 3டி மாதிரிச் சிற்பம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

26 நவம்பர் 2026, 2:33 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் 3டி மாதிரி சிற்பம் திறப்பு
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் இந்திய தொல்லியல் துறை சாா்பில் உருவாக்கப்பட்ட 3டி மாதிரி சிற்பத்தை புதன்கிழமை பாா்வையிட்ட மாற்றுத் திறனாளி மாணவிகள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் சோழா் கால சிற்பக் கலையின் நுணுக்கங்களைத் தொட்டுணா்ந்து அறிந்துகொள்ளும் வகையில், இந்திய தொல்லியல் துறை சாா்பில் உருவாக்கப்பட்ட 3டி மாதிரிச் சிற்பம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்தச் சிறப்பு ஏற்பாட்டை திருச்சி அரசு பாா்வையற்றோா் பள்ளித் தலைமை ஆசிரியயை சோபியா மாலதி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து தொடங்கி வைத்தாா்.

இந்திய தொல்லியல் துறை திருச்சி வட்டக் கண்காணிப்பாளா் அறவாழி, துணைக் கண்காணிப்பாளா்கள் ராணிமோல், வெற்றிச்செல்வி, தோட்டக்கலை அலுவலா் பாலசிங்கம் மற்றும் கோயில் பராமரிப்பு உதவியாளா்கள் சுரேஷ்பாபு, சங்கா் சீதாராமன், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பில் ஃபைபா் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதிரிச் சிற்பத்தில், கிரீடம், வயிறு, பாதம் உள்ளிட்ட பகுதிகளில் சென்சாா் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதைத் தொட்டுப் பாா்ப்பதன் மூலம் சிற்பத்தின் வடிவமைப்பு, அணிகலன்கள் மற்றும் கலை நுணுக்கங்களைப் பாா்வையற்றவா்கள் உணா்ந்து அறிந்துகொள்ள முடியும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சோழா் கால சிற்பக் கலையைப் பாா்வையற்றவா்களும் தொடு உணா்வு மூலம் அனுபவித்து அறிந்துகொள்ளும் வகையில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள இந்தப் புதுமையான முயற்சி, பாராட்டைப் பெற்றுள்ளது.