அபிஷேகத்துக்குக்கூட தண்ணீர் இல்லை: பிரகதீஸ்வரர் கோயிலில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்த அர்ச்சகர்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அபிஷேகத்துக்கு தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து...
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அபிஷேகத்துக்கு தண்ணீர் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில், உலக நாடுகள் வியக்கும் அளாவுக்கு கட்டடக் கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது.
இந்த நிலையில், கோயிலில் தினசரி அபிஷேகம் செய்வதற்குக்கூட தண்ணீர் இல்லை என கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "கோயிலில் தினசரி அபிஷேகத்துக்குக்கூட தண்ணீர் இல்லை. சிங்கமுக கிணற்றில் இருந்துதான் நீரை எடுத்து அபிஷேகம் செய்ய வேண்டியுள்ளது. தற்போது சிங்கமுக கிணற்றிலும் சுத்தமாக தண்ணீர் இல்லை. இதனால் அபிஷேகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பௌர்ணமியில் கூட அபிஷேகம் செய்ய முடியவில்லை.
ஆடி திருவாதிரையின்போது அரசு விழாவுக்கு ரூ. 50,000 செலவு செய்தேன். அந்தப் பணமும் இன்னும் திரும்ப வரவில்லை. கொடுத்து விட்டதாகக் கூறுகிறார்கள், ஆனால் இன்னும் வரவில்லை.
கடந்த நிர்வாகத்திலாவது நன்றாக இருந்தது. இந்த நிர்வாகத்தில் சரியில்லை. இதில் அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நிர்வாகத்தில் கோயிலில் தீபமேற்றுவதற்கான எண்ணெய்யும் சரியாகக் கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது சரிவர எண்ணெய் வருவதில்லை. விளக்குகளே இல்லாமல்கூட பூஜை செய்து வருகிறோம்.
இன்றைய பூஜையில் அபிஷேகம் செய்வதற்கு சுத்தமாக தண்ணீர் கிடையாது. தண்ணீர் இல்லாமல்தான் பூஜை செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல், எங்களுக்கான சம்பளமும் கடந்த 3 - 4 மாதங்களாக வரவில்லை. மாதம் ரூ. 6,000 சம்பளமே வருவதில்லை.
ஆகையால், அபிஷேகத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை அரசு நல்ல முறையில் ஏற்படுத்தித் தர வேண்டும். சம்பளமும் தர வேண்டும்" என்று தெரிவித்தார்.
கோயிலில் அபிஷேகம் செய்வதற்கே தண்ணீர் இல்லை என புகார் எழுந்த நிலையில், சிங்கமுக கிணற்றில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
Priest levels a series of allegations at the Gangaikondacholapuram Brihadeeswara Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.