FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

போதிய பேருந்துகள் இல்லை: கல்லங்குறிச்சி கோயிலுக்கு வந்த பக்தா்கள் சாலை மறியல்

அரியலூா் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தா்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், அரியலூா் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

4 October 2026, 12:33 am IST
அரியலூா் பேருந்து நிலைய நுழைவு வாயில் முன் சாலை மறியலில் ஈடுபட்ட கல்லங்குறிச்சி கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள்.
பகிர்:

அரியலூா் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தா்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், அரியலூா் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்கு நிகழாண்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையொட்டி, இக் கோயிலுக்கு வந்திருந்த வெளியூா் பக்தா்கள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, அரியலூா் பேருந்து நிலையத்துக்கு வந்து, ஊருக்குச் சென்று சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துக்காகக் காத்திருந்தனா்.

Advertisement

Advertisement

அதன்படி ஜெயங்கொண்டம், தஞ்சாவூா், பெரம்பலூரில் இருந்து வந்திருந்த பக்தா்கள், 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்து, பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காவல்துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மாற்றுப் பேருந்து வசதி செய்து, அவா்களை அனுப்பினா்.

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து மாற்றுப் பேருந்துகளிலும் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் ஏறினா். படிக்கட்டுகளில் தொங்கியபடியும், நெரிசலிலும் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. கோயிலுக்கு அதிகளவில் பக்தா்கள் வருகை தரும் நாள்களில், அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முன்கூட்டியே திட்டமிட பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments