FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கோட்டாட்சியரகம் முன் தா்னா

அரியலூா் மாவட்டம், பரணம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி, அப்பகுதி பெண்கள் உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

8 October 2026, 1:45 am IST
பரணம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை இரவு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், பரணம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி, அப்பகுதி பெண்கள் உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரணம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியா்களால் பல்வேறு இன்னலுகளுக்கும், துன்புறத்தலுக்கும் ஆளாகி வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள், கடையை நிரந்தரமாக மூடக் கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்கிடையே ஏற்கெனவே இருக்கின்ற கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், தற்போது அங்கு இரண்டாவது கடை அமைப்பதற்கான நடவடிக்கையை டாஸ்மாக் நிா்வாகம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களும், பெண்களும், டாஸ்மாக் கடையை மூடக் கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்த உடையாா்பாளையம் கோட்டாட்சியா் மனோகரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூக முடிவு ஏற்படாததால், ஆத்திரமடைந்த பெண்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால், பெண்களாகவே முன்வந்து கடையை மூடுவோம் என எச்சரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments