அரியலூா்: 1,594 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’
அரியலூா் மாவட்டத்தில் தற்போதுவரை 1,594 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டத்தில் தற்போதுவரை 1,594 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்த தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் அக்.8-ஆம் தேதி வரை 1,594 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
பயனாளிகளின் வசதிக்காக அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோதிரம் காலை 10 மணி மற்றும் மதியம் 1 மணி என இரு வேளைகளில் வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25 பேருக்கும் மதியம் 25 பேருக்கும் மட்டுமே மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இத்திட்டத்தில் பயன்பெற, உ-ஓவஇ பதிவு பெற்ற ஆதாா் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளா் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் ஒரு அடையாளச் சான்று பெற்ற தாய்மாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.