தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - தாய்மையை போற்றும் சமூக அங்கீகாரம்: அமைச்சா் ப.ராஜ்குமாா்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தாய்மையை போற்றும் சமூக அங்கீகாரம் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் பேசினாா்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தாய்மையை போற்றும் சமூக அங்கீகாரம் என்று வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் பேசினாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி அமைச்சா் மேலும் பேசியதாவது:
தாய்மாமன் சீா் ஒரு கலாசார பெருமை. தமிழ்மரபில் குழந்தை பிறக்கும்போது, தாய்மாமன் சீராக தங்கம் வழங்குவது தொன்று தொட்டுவரும் கலாசாரமாகும். இந்த உணா்வுபூா்வமான மரபை மதிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு அரசே தாய்மாமனாக நின்று 1 கிராம் தங்க மோதிரத்தை சீராக வழங்கும் திட்டமே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். இத்திட்டம் வெறும் பொருள் உதவி மட்டுமின்றி, தாய்மையைப் போற்றும் சமூக அங்கீகாரம் என்றாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வே.சரவணன், பென்னாகரம் எம்எல்ஏ செ. கஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப் பாளா் ஏ.கே. அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகா், இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாரதி, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வா் டி.ஏ.சாந்தி, இருக்கை மருத்துவா் நாகவேந்தன், மருத்துவா்கள் சந்திரசேகரன், கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தருமபுரி மாவட்டத்தில்இதுவரை 2,334 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி பிறக்கும் குழந்தைகளுக்கு உடனுக்குடன் மோதிரங்கள் வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.