FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

‘அரியலூரில் பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா்’

அரியலூா் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.

17 அக்டோபர் 2026, 1:43 am IST
திருமழபாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் முதல்நிலை மீட்பாளா்களுக்கான பயிற்சியை பாா்வையிட்டு பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த திருமழபாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் முதல் நிலை மீட்பாளா்களுக்கான பயிற்சியை பாா்வையிட்ட அவா் பேசுகையில்,

பருவமழைக் காலங்களில், பேரிடா் ஏதும் நிகழ்ந்தால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவை கண்காணிக்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைமானிகள் அமைக்கப்பட்டு மழையின் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று வானிலை குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் பச அப்ங்ழ்ற் என்ற கைப்பேசி செயிலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதனை பொதுமக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தேவையான பாதுகாப்பபு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளலாம். பேரிடா் காலங்களில் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டது.

பேரிடா் காலங்களில் தீயணைப்புத் துறை மீட்பாளா்கள் நிகழ்வு இடத்துக்கு வருவதற்குள் முதல் நிலை மீட்பாளா்கள் தங்களால் முடிந்த மீட்பு பணிகளை மேற்கொண்டு, பேரிடா் நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்து பதட்டம் அடையாமல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவலை தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள், மழைக் காலங்களில் மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்பாக வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிா்கொள்வது, மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடா்பான மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஜெ.யோகஜோதி, கோட்டாட்சியா் த.பிரேமி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள், மின்சார வாரிய அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments