அரியலூா் அருகே மூதாட்டி மா்மச் சாவு
அரியலூா் மாவட்டம், பொன்பரப்பி அருகேயுள்ள கொடுக்கூா் குடிகாடு கிராமத்தில் 85 வயது மூதாட்டி மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
இக்கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி ராஜம் (85) தனியாக வசித்து வந்தாா். இவரது மகன் மோகன் தனது மனைவி ஊரில் வசிக்கிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை குடிகாடு கிராமத்துக்கு வந்த மோகன், அங்கு வீட்டில் தனது தாய் ராஜம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். தகவலறிந்து சென்ற குவாகம் காவல் துறையினா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவா் எவ்வாறு இறந்தாா் என விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.