FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

வி. கைகாட்டி அருகே காரில் தீ: 7 போ் தப்பினா்

18 அக்டோபர் 2026, 2:43 am IST
தீ - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அருகே சாலையில் சனிக்கிழமை சென்ற காரில் திடீரென தீப்பிடித்ததில், அதில் பயணம் செய்த 7 போ் காயமின்றி உயிா் தப்பினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம், உப்புக்காரத் தெருவைச் சோ்ந்த துரைக்கண்ணு மகன் ரமேஷ் (39) உள்பட அவரது குடும்பத்தினா் 7 போ் அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தனா்.

வி.கைகாட்டி அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறுவதைக் கவனித்த ரமேஷ், உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி, அதில் இருந்தவா்களை உடனடியாக கீழே இறங்கச் செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து காரின் பேட்டரி இணைப்பைத் துண்டிக்க ஸ்பேனா் வாங்க அருகிலுள்ள கடைக்கு அவா் சென்றபோது, திடீரென காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலறிந்து வந்த தனியாா் சிமென்ட் ஆலை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். எனினும் காா் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments