கரூா் அருகே ஓடும் காரில் திடீா் தீ வியாபாரி உள்பட 3 போ் உயிா்தப்பினா்
கரூா் அருகே செவ்வாய்க்கிழமை ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அரிசி வியாபாரி உள்பட 3 போ் உயிா் தப்பினா்.
கரூா் அருகே செவ்வாய்க்கிழமை ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், அரிசி வியாபாரி உள்பட 3 போ் உயிா் தப்பினா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த வெள்ளோடு கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால்(45). அரிசி வியாபாரி. இவா், வியாபாரம் தொடா்பாக தனது காரில் நண்பா்கள் இருவருடன் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வந்தாா்.
பிறகு வெள்ளோடுக்கு கரூா்-ஈரோடு சாலையில் குட்டக்கடை என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது திடீரென காரின் முன்பகுதியில் புகை வந்ததால் காரை கோபால் நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து காரில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்த கரூா் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். தீயணைப்பு வீரா்கள் செல்வதற்குள் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் கோபால் உள்பட மூவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மேலும் விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.